பொன்னொளி மடம்

பிரம்மபுரம் என்ற ஒரு ஊர் இருந்தது. அங்கு பொன்னொளிப் பித்தர் என்ற ஒரு அப்பாவி ஆன்மீகவாதி இருந்தார். அவர் பொன்னொளி மடம் என்ற பூரண யோக மடத்தை ஆரம்பித்து நடத்தி வந்தார்.

அவருக்கு உதவியாக அவருடனே  மக்கானந்தர், கமலக்கூத்தர் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். இருவருமே பொன்னொளிப் பித்தரின் மீது மிகுந்த அன்பும், பக்தியும் கொண்டவர்கள்.

மக்கானந்தருக்கு ஆன்மீகம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆன்மீக முறைகளை பின்பற்ற விரும்புவார். எல்லோருக்கும் நல்லவர். மிகவும் அப்பிராணி. கருணை மிகுந்தவர். ஆனால் நடைமுறை அறிவோ, லௌகீக சாமர்த்தியமோ சிறிதும் இல்லாதவர்.

யார் பொறுப்பு?

பொன்னொளி பள்ளிக்கூடக் குழந்தைகள் இரண்டு அணிகளாகப் பிரிந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மைதானத்திற்குள் ஓடி வந்த ஒரு பெரிய நாய்  தவறுதலாக ஸ்டம்புகளை தட்டி விட, அவை கீழே விழுந்து விட்டன.

முதல் அணியினர் தவறை சரி செய்யட்டும் என்று இரண்டாவது அணியினர் எதுவும் செய்யாமல் இருந்தனர். இரண்டாவது அணியினர் தவறை சரி செய்யட்டும் என்று முதல்  அணியினர் எதுவும் செய்யாமல் இருந்தனர்.

அதனால் ஆட்டம் துவங்காமலே இருந்தது.

அப்போது ஆட்டத்தை வேடிக்கை பார்க்க பார்வையாளராக அமர்ந்திருந்த ஆனந்தி மைதானத்திற்குள் குடுகுடுவென்று ஓடி வந்து ஸ்டம்புகளை சரி செய்தாள்.

எல்லோரும் நல்லவர்களே

பொன்னொளி பள்ளிக்கூடக் குழந்தைகள் எல்லோரும் சந்துருவை  மிகவும் பொல்லாதவன் என்பார்கள்.  சந்துரு துடுக்குத்தனமாக பேசுவான். எப்போதும் தான் மட்டுமே ஜெயிக்க வேண்டும் என்று நினைப்பான். தான் தோற்பது போலிருந்தால் தப்பாட்டம் ஆடி, அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஆட்டத்தை கலைத்து நிறுத்தி விடுவான். எவருமே அவனோடு சேர்ந்து விளையாட மாட்டார்கள்.பேசவும் மாட்டார்கள்.

ஆனால் பள்ளிக்கூடத்தில் புதிதாக சேர்ந்த ஆனந்தியோ, சந்துருவோடு அன்போடு பேசிப் பழகினாள். அது எல்லோருக்குமே ஆச்சரியமாக இருந்தது,

உயர்ந்த மொழி

ரகு, “என் தாய்மொழியான தமிழ்தான் உலகிலேயே உயர்ந்த மொழி. மற்ற மொழிகளெல்லாம் மோசமானவை,” என்று கர்வத்துடன் பேசிக் கொண்டிருந்தான்.

அதைக் கேட்டு அழகாக புன்னகைத்த கமலா டீச்சர், “ரகு, உன் தாய்மொழியான தமிழில் உயர்ந்த கருத்துள்ள ஒரு கதையைச் சொல்” என்றார். அவன் திருதிருவென்று விழித்தான்.

கமலா டீச்சர் ஆனந்தியிடம், “உன் தாய்மொழியான கன்னடத்தில் இருக்கும் உயர்ந்த கருத்துள்ள ஒரு கதையைச் சொல்” என்றார்.

உடனே ஆனந்தி தன் கரிய, அழகிய, அகன்ற கண்களை விரித்து, இமைகள் படபடக்க, உற்சாகமாக கன்னடத்துக் கதை ஒன்றை தமிழில் கூறினாள்.

மழையே, மழையே, போகாதே

ஒரு நாள் அசட்டு சந்துரு வெயிலால் மிகவும் சிரமப்பட்டான். தன் நண்பர்களிடம், “மழை மிகவும் பொல்லாதது. அது பெய்யாமல் நம்மை சிரமப்படுத்துகிறது.” என்றான்.

அவன் நண்பர்களும் “ஆமாம். மழை மிகவும் பொல்லாதது.” என்றனர்.

அப்போது கமலா டீச்சர், “கடவுளின் அருளை நம்மால் பார்க்க முடிவதில்லை. அதனால்தான் கடவுள் நாம் பார்க்க முடிகிற ரூபத்தில் அருளை நம்மேல் பொழிகிறார். நாம்தான் அருளான மழையை வெறுத்து ஒதுக்குகிறோம்.” என்றார்.

“மிஸ், மழை பெய்ய வேண்டுமென்றுதானே நான் சொன்னேன்?” என்றான் சந்துரு.

மனமார பாராட்டு

ஒரு நாள் சந்துரு பொன்னொளி பள்ளிக் கூடத்திற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

அப்போது பக்கத்து வீட்டு பத்மா வந்தாள். “சந்துரு, எனக்கு கட்டுரைப் போட்டியில் பரிசு கிடைத்திருக்கிறது,” என்றாள்.

“அதில் என்ன இருக்கிறது!,” என்று அலட்சியமாகக் கூறி விட்டு அசட்டு சந்துரு பஸ் நிலையத்திற்கு சென்றான்..

ஆனால், பஸ் முன்பே போய் விட்டிருந்தது. காரணம் சந்துருவின் வீட்டுக் கடிகாரம் தவறாக நேரம் காட்டியதுதான்.

உயர்ந்த லட்சியம்

ஒரு நாள் கமலா டீச்சர் அழகான பெரிய மாம்பழத்தோடு வகுப்பறைக்குள் வந்தார். “குழந்தைகளா! இது அதிர்ஷ்டத்தைத் தரும் அபூர்வமான மாம்பழம் கடைகளில் கிடைக்காது . ஒவ்வொருவராக எழுந்து. ` எதிர்காலத்தில் நான் இப்படி ஆக வேண்டும்,’ என்று லட்சியம் வைத்திருக்கிறேன் என்று சொல்ல வேண்டும். மனிதரால் சாதாரணமாக செய்ய முடியாத சிரமமான காரியத்தை யார் செய்ய நினைக்கிறாரோ அவருக்கு இந்த மாம்பழம் பரிசாகக் கிடைக்கும்,” என்றார் கமலா டீச்சர்.

“நான் எதிர்காலத்தில் கடலுக்கு அடியில் போகும் நீர்மூழ்கிக் கப்பலின் தலைவன் ஆவேன்,” என்றான் கோபி.

“மீனைப் போல ஆகப் போகிறாயா!” என்று கூறி அழகாக சிரித்தார் கமலா டீச்சர்.

கூட்டு முயற்சி

கமலா டீச்சர் சந்துருவை அழைத்து, “இன்னமும் இரண்டு நாட்களில் கல்வி அமைச்சர் பொன்னொளிப் பள்ளிக்கூடத்திற்கு வரப் போகிறார். அதனால் நீ மற்ற குழந்தைகளை சேர்த்துக் கொண்டு நம் தோட்டத்தை சீர்படுத்து” என்றார்.

அசட்டு சந்துரு உற்சாகத்துடன் எல்லா குழந்தைகளையும் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றான். “நீ இதைச் செய், நீ அதைச் செய்" என்று ஒவ்வொருவரிடம் தனக்குத் தோன்றிய வேலைகளைச் செய்யச் சொன்னான். பிறர் வேலை செய்வதை மேற்பார்வை பார்த்தான்.

ஆசை

ஒருநாள் மதிய உணவு வேளையில் சந்துரு “எனக்கு போளி ரொம்ப பிடிக்கும். எத்தனை வேண்டுமானாலும் ஆசையோடு சாப்பிடுவேன்,” என்று ஆனந்தியிடம் கூறினான்.

“எனக்கும் போளி ரொம்ப பிடிக்கும். நானும் சாப்பிடுவேன்,” என்றாள் ஆனந்தி.

அப்போது அங்கே வந்த கமலா டீச்சர், “நாம் முன்னேற வேண்டுமானால் ஆசையை விட வேண்டும். அவசியத்திற்காக எதையும் செய்ய வேண்டும்,” என்றார்.

“ஆசையை எப்படி விடுவது?,” என்று கேட்டான் அசட்டு சந்துரு.

உயர்ந்த பேச்சு

பொன்னொளிப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த கோபிக்கு பேசும்போது வார்த்தை திக்கித் திக்கி வரும். ஏனென்றால் அவனுக்கு நாக்கில் ஏதோ சின்ன பிரச்சனை.

கோபிக்கு உதவுவதாக நினைத்துக் கொள்ளும் சந்துரு, அவன் பேச ஆரம்பித்தால், “நீ பேசாதே, நீ என்ன சொல்ல வருகிறாய் என்று நான் மற்றவர்களுக்குச் சொல்கிறேன்,” என்று கூறுவான். கோபியைப் பேசவே விட மாட்டான்.

ஒரு நாள் சந்துரு பேசும்போது தவறான வார்த்தை ஒன்றைப் பயன்படுத்தினான். அதன் அர்த்தம் கூட அவனுக்குத் தெரியாது! உடனே கோபி திக்கியபடியே சொன்னான். “நாமெல்லாம் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இப்படிப்பட்ட வார்த்தைகளை நாம் பேசக் கூடாது,” என்றான்.