வீராதி வீரன்

பொன்னொளிப் பள்ளிக்கூடத்தில் வீரம் பற்றி கமலா டீச்சர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.  "குழந்தைகளா, நீங்கள் ஒவ்வொருவரும் வீரத்துடன் நடந்து கொண்ட நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்லுங்கள்," என்றார்.

அம்புஜம் தான் நாயைப் பார்த்து பயப்படாமல் நடந்து வந்ததைச் சொன்னாள்.  ரவி தான் பரீட்சைக்குப் பயப்படாமல் அதை நல்ல முறையில் எழுதியதைச் சொன்னான்.  ஜமுனா இரவில் இடி இடித்த போது தான் பயப்படாமல் இருந்ததைச் சொன்னாள்.

சிறந்த நன்கொடை

நம் நாட்டின் கொடி தினத்தன்று பொன்னொளிப் பள்ளிக்கூடத்தில் எல்லா குழந்தைகளும் நிதி தர விரும்பினர்.

"வீட்டில் பெரியவர்களைக் கேட்டுவிட்டு  அவரவர் பிரியப்பட்டதைத் தரவேண்டும். யார் சிறப்பாக அதிக நிதி தருகிறாரோ அவருக்கு பரிசு உண்டு," என்றார் கமலா டீச்சர்.

பல குழந்தைகள் பத்து ரூபாய் நன்கொடை தருவதைப் பார்த்தான் அசட்டு சந்துரு.  அவன் தன் அப்பாவிடம் அடம் பிடித்து இருபது ரூபாய் வாங்கி வந்தான்.  "நான்தான் அதிகமாகத் தந்திருக்கிறேன். எனக்குத்தான் பரிசு கிடைக்கும்," என்று சந்துரு எல்லோரிடமும் சொன்னான். ஆனந்தி ஆயிரம் ரூபாய் தந்தாள். ஆனால் அவள் அதைப் பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

பத்தாகும் பந்து

விளையாட்டு வகுப்பில் அசட்டு சந்துருவும், ஆனந்தியும் பந்து விளையாட விரும்பினர். ஒரே ஒரு பழைய, அழுக்கான பந்துதான் இருந்தது. சந்துருவிற்கு அதைத் தொடவே பிடிக்கவில்லை.

அப்போது கமலா டீச்சர், “நம்மிடம் இருப்பதை முழுமையாக கவனமாக பயன்படுத்தினால், நமக்கு வேண்டியது நிறைய கிடைக்கும். இப்போது இந்தப் பந்துதான் இருக்கிறது. மீதி பந்துகள் எல்லாம் காணாமல் போய்விட்டன.” என்றார்.

சந்துரு மனதை மாற்றிக் கொண்டான். ஆனந்தி பந்தை நன்றாகக் கழுவினாள்.

இருவரும் சந்தோஷமாக விளையாடும் போது, சந்துரு பந்தை வேகமாக எறிந்தான். அது மைதானத்தின் மூலையில் இருந்த ஒரு புதரில் போய் விழுந்தது.

நடந்தவற்றிற்கு நன்றி

ஒருநாள் கமலா டீச்சர், "நமக்கு ஏதாவது தேவை என்றால், இதுவரை நமக்குக் கிடைத்த எல்லாவற்றிற்கும் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்போது அவர் நம் தேவையை  நிறைவேற்றுவார்," என்றார்.

"எனக்கு இப்போது சாக்லேட் சாப்பிட ஆசையாக இருக்கிறது. இதுவரை எனக்குக் கிடைத்த சாக்லேட்டுகளுக்கு கடவுளிடம் நன்றி சொன்னால். எனக்கு  சாக்லேட் கிடைக்குமா?" என்று அசட்டு சந்துரு கேட்டான்.

“ஆசை வேறு, தேவை வேறு. ஆனாலும் கடவுளிடம் உண்மையாக, நெஞ்சார நன்றி சொன்னால், ஆசையைக்கூட நிறைவேற்றுவார்," என்றார் கமலா டீச்சர்.

ஜனாதிபதியும். சப்பாத்தும்

ஜனாதிபதியிடம் பரிசு வாங்க அசட்டு சந்துரு, கமலா டீச்சரோடு டெல்லிக்குப் போனான். அவனுக்கு புதிய உடைகளோடு, புதிய சப்பாத்துக்களையும் (ஷூ) அவன் அப்பா வாங்கித் தந்திருந்தார்.

போன இடத்தில் சந்துருவிற்கு கால்களில் கட்டி வந்துவிட்டது. அவனால் ஷூ போடமுடியவில்லை. "எல்லோரும் ஷூ போட்டுக் கொண்டு அழகாக வருவார்கள். நான் மட்டும் ஷூ போடாமல் போகவேண்டுமே! "  என்று அழுதான்.

கமலா டீச்சர், " ஷூ விஷயத்தில் முன்பு எப்போதாவது விஷமம் பண்ணியது உண்டா?" என்று கேட்டார்.

பிரார்த்தனையும், பரிசும்

அசட்டு சந்துரு வகுப்பில் பாடத்தை ஒழுங்காக கவனிக்க மாட்டான். சில சமயம் தூங்கியே போய்விடுவான்.
 
ஒரு நாள் கமலா டீச்சர்,  "கடவுளிடம் பிரார்த்தனை செய்தால் எல்லாமே நல்லபடியாக நடக்கும்," என்றார். அதை மட்டும் சந்துரு கவனித்தான்.

"ஆனால் நம்மால் முடிந்ததை நாம் செய்து முடித்துவிட வேண்டும்," என்று கமலா டீச்சர் அடுத்து சொன்னதை சந்துரு கவனிக்கவில்லை. அதற்குள் அவன் தூங்கிவிட்டான்!

பாதையிலே பாறாங்கல்

பொன்னொளிப் பள்ளிக்கூட வாசலிலே ஒரு நாள் ஒரு பெரிய பாறாங்கல் கிடந்தது.

சில குழந்தைகள் அந்தக் கல்லை சுற்றிக் கொண்டு நடந்தனர். சில குழந்தைகள் அந்த கல்லின் மீதே ஏறிச் சென்றனர். எல்லோருமே 'யார் கல்லை இங்கே போட்டார்கள்?' என்று கோபப்பட்டார்கள்  'யார்தான் இதை ஓரமாக எடுத்துப் போட்டு பாதையை சரி செய்யப் போகிறார்களோ!' என்று கவலைப் பட்டார்கள்.

மூன்று குரங்குகள்

சந்துருவின் பிறந்த நாளுக்கு கமலா டீச்சர் மூன்று குரங்கு பொம்மைகளைப் பரிசாகத் தந்தார். முதல் குரங்கு கண்களை அகலமாக திறந்து விழித்துப் பார்ப்பது போலிருந்தது. இரண்டாவது குரங்கு இரண்டு காதுகளையும் விரித்து வைத்து கூர்ந்து கவனிப்பது போலிருந்தது. மூன்றாவது குரங்கு சிரித்தபடி வாயைத் திறந்து பேசுவது போலிருந்தது.

உண்மைக்குப் பரிசு

பொன்னொளிப் பள்ளிக்கூடத்தில் கமலா டீச்சர் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது யாரோ ஒரு குறும்புக்காரக் குழந்தை "ஊய்," என்று வேண்டுமென்றே கத்தியது. மற்ற குழந்தைகள் சிரித்தனர்.

கமலா டீச்சர், "குறும்புத்தனம் செய்தது யார்? உண்மையை உடனே சொல்ல வேண்டும்," என்றார்.

கத்திய சந்துரு பயந்து கொண்டே எழுந்து நின்றான். " நான்தான் விஷமம் செய்தேன். இனிமேல் இப்படிச் செய்ய மாட்டேன்." என்றான்.

"வகுப்பு முடியும்வரை தனியாக நில்," என்று கமலா டீச்சர் கூறிவிட்டார்.

எல்லாமே பலம்தான்

பொன்னொளிப் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த சந்துரு ஒரு நாள் பெரிய மூக்குக் கண்ணாடி போட்டான். மற்ற குழந்தைகள் அவனை கேலி செய்ததால் அழுதான்.
 
"மிஸ், எனக்கு மட்டும் ஏன் கண் கெட்டு பலவீனமாகி விட்டது?" என்று அழுது கொண்டே கமலா டீச்சரிடம் கேட்டான்.

அவனை அன்போடு சமாதானப் படுத்திய கமலா டீச்சர், "சந்துரு  கண்ணா, பலவீனம் என்று எதுவுமே இல்லை. எல்லாமே பலம்தான். தேவையான நேரத்தில் பலவீனம் பலம் என்பது புரியும்," என்றார்.

ஒரு நாள் கமலா டீச்சர் எல்லா குழந்தைகளையும் சுற்றுலாவிற்காக ஒரு காட்டிற்கு அழைத்துச் சென்றார்.