21. மீசை தாத்தா பற்றிய கவலை - மீன்கொடி
தாத்தாவின் கடிதம் வந்த ஒரு மணி நேரத்தில் நானும், ஜமுனாவும் போக் ரோடு வீட்டிற்குச் சென்றோம். எல்லோரும் வீட்டில்தான் இருந்தனர். தாத்தாவின் கடிதத்தை புருஷண்ணாரிடம் கொடுத்தேன். அவர் கண்ணாடி போட்டிருக்கவில்லை. ‘என்ன கடிதம்?’ என்று கேட்டார்.
‘தாத்தாவின் கடிதம். வெளியூர் போய்விட்டார்’ என்றேன்.
‘இரண்டு நாட்களில் திரும்பி விடுவார். வழக்கமாக நடப்பதுதானே’ என்றார் புருஷண்ணார்.
‘கடிதம் எழுதி வைத்துவிட்டு போயிருக்கிறார்’ என்றேன்.
‘அதற்கென்ன? போன் கிடைத்திருக்காது’ என்றார் மதுவண்ணார்.