நெடுஞ்சுவர்

ஒரு கிறிஸ்துமஸ் தினத்தன்று எங்கள் வீட்டிலிருந்த பழைய காலத்து பிலிப்ஸ் வானொலிப் பெட்டியில், அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவின் விசேஷ ஒலிபரப்பை அப்பாவும், அம்மாவும், மாமாவும், நானும், கேட்டுக் கொண்டிருந்தோம். அமரராகி விட்ட பகுத்தறிவுத் தலைவர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தைப் பற்றிய நேரடி ஒலிபரப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது.

சலீமா

குடியாத்தத்தில் நடந்த என் நண்பனின் திருமணத்திற்கு சென்றிருந்தபோது, மண்டப வாசலில் நாற்பது லட்ச ரூபாய்க்கு குறைவான தொகையில் வாங்க முடியாத காரொன்றில் உயர்தர உடையணிந்திருந்த கனவான் வந்திறங்கினார். அவரை எங்கேயோ எப்போதோ பார்த்திருக்கிறேனே? யோசித்தபோது, அவன் என் பள்ளிக்கூட நண்பன் குமார் என்பது நினைவிற்கு வந்தது.

* * * *

பத்துக் கடை பாலு

ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த அந்த பிரம்மாண்டமான பங்களாவிற்குள் நான் நுழைந்தபோது, சாம்பல் நிற சீருடை அணிந்திருந்த காவல்காரர்கள் என்னைத் தடுத்து நிறுத்தவில்லை. புன்னகையோடு வணக்கம் கூறி காம்பவுண்டு கேட்டைத் திறந்து விட்டார்கள். நான் அடிக்கடி அங்கு சென்று வருபவன். அந்த பங்களா உரிமையாளரின் ஒரே செல்ல மகன் சரவணனின் ஒரே நல்ல நண்பன். பிறருக்கு உள்ள கட்டுப்பாடுகள் எனக்கு இல்லை.

அய்யா

மதிய உணவிற்கு ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்த சந்திரகாந்தன் கவலையுடன் இருந்தான். அதற்கான காரணம் அவன் மனைவி பூங்கொடிக்குத் தெரியாவிட்டாலும், கணவன் கவலையுடன் இருந்த ஒரே காரணத்தினால் மனைவியும் கவலையில் ஆழ்ந்தாள். வாடிய பயிரைக் கண்டால் தான் வாடிவிடும் ஆன்மீகப் பரம்பரையில் வந்த இந்திய மனைவியால் கணவனின் கவலையை எப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்?

‘அவராக எதுவும் சொல்லாமல், காரணத்தைக் கேட்பது அவரை சங்கடப்படுத்திவிடும்,’ என்று நினைத்துக் கொண்டே பூங்கொடி பேச்சு எதுவுமின்றி மதிய உணவைப் பரிமாற ஆரம்பித்தாள். சந்திரகாந்தன் மௌனமாக சாப்பிட்டான்.

தெளிவு

சொந்தமாக சிறிய வியாபார நிறுவனத்தை நடத்தி வரும் ஜானகி  என்ற இளம்பெண் ஒருவர் இரண்டு நாட்களுக்கு முன் என்னை சந்திக்க வந்திருந்தார். 'என் நிறுவனம் பெரிய அளவில் வளர என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டார்.  உள்ளுக்குள் படபடப்பும், அவசரமும் இருந்தாலும், அதை வெளிக்காட்டாத அழகிய முகம். மேற்பரப்பில் அமைதியான, தடங்கலற்ற வற்றாத நீரோட்டப் பேச்சு.

அகல்யை என்று நினைத்தனையோ

மார்கழி மாதத்தில் ஒரு நாள் மாலை நேரத்தில் நதிக்கரைக்கு நீராடச் சென்றாள் ஆனந்தவல்லி. அவள் முன்கோப முனிவனான சந்திரசூடனின் பத்தினி.

‘பிரம்மனுக்குப் பிழையின்றி படைக்கத் தெரியாது,’ என்ற ஓர் அசுரனின் ஏளனப் பேச்சைப் பொய்யாக்குவதற்காக, அல்லும்பகலும் அரும்பாடுபட்டு மிகுந்த கவனத்துடன் நான்முகன் உருவாக்கியப் பேரழகி ஆனந்தவல்லி. தன் படைப்பைக் கண்டு தானே பிரமித்த பிரம்மனின் வேண்டுகோளுக்கிணங்கி பிற தேவர்களும் ஆனந்தவல்லிக்கு அனைத்து வளங்களையும் வாரி வழங்கி மகிழ்ந்தனர்.

சலூனுக்குப் போன சந்துருவின் கதை

சின்ன வயதில் இராணுவத்திற்கு ஆள் எடுக்கிறார்கள் என்ற விளம்பரத்தைப் பார்த்ததும், இராணுவ அதிகாரி ஆக வேண்டும்  என்ற ஆசை உண்டாயிற்று.

அப்போது ஆறடி உய்ரம் இருந்தாலும், எலும்பும், தோலுமாக, ஒட்டடை குச்சி சோடா பாட்டில் கண்ணாடி போட்டுக் கொண்டது போல இருப்பேன். என்ன தைரியத்தில் இராணுவ அலுவலகத்திற்குப் போனேன் என்று இன்று வரை புரியவில்லை.
 
எல்லோருக்கும் மார்பளவு எடுத்துக் கொண்டிருக்கும்போது, நான் என் விண்ணப்பப் படிவத்தை நீட்டினேன். என்னைக் கூர்ந்து பார்த்த இராணுவ அதிகாரி நான் தந்த படிவத்தை என் கையிலேயே திருப்பி கொடுத்து விட்டு, " உன்னை எடுக்கமாட்டார்கள்," என்று நல்வாக்கு தந்தார்.

குறுக்கு வழி

பொன்னுலகம் ஒன்றை கவிதை மூலம் படைக்கும் முயற்சியில் சிந்தனைக் கடலில் ஆழ்ந்து மூழ்கி, முத்துக்களை எடுத்து நான் சொல்லச் சொல்ல என் ஒரே ரசிகையான ஆனந்தி எழுதிக் கொண்டிருந்தபோது, வெங்கட்டிடமிருந்து போன் வந்தது.

டாக்டர் சம்பையா

டெல்லியில் வெளிநாட்டு வங்கி ஒன்றில் துணை மேனேஜராக வேலை பார்க்கும் இருபத்தியெட்டு வயது அமலா ஒரு மாத விடுமுறையில் சென்னைக்கு வந்து என்னோடு தங்கி இருந்தாள். நானும் ஒரு மாதம் என் சொந்த அலுவலகத்திற்கு மட்டம் போட்டுவிட்டு அவளோடு பேசுவது ஒன்றையே என் வாழ்வின் அப்போதைய குறிக்கோளாகக் கொண்டிருந்தேன்.

அவள் சென்னைக்கு வந்த மூன்றாவது நாள் என் கால்களில் முட்டிக்குக் கீழே தோல் பல இடங்களில் கறுத்திருப்பதை கவனித்து விட்டுப் பதறிப் போனாள். உடனே அவள் அப்பாவிடம் போனில் பேசி தோல் வியாதி நிபுணர் ஒருவரின் விலாசத்தை வாங்கியவள், கையோடு என்னை அவரிடம் அழைத்துக் கொண்டு சென்றாள்.

எதிர் வீடு

நேர்மையாகவும், உண்மையாகவும், விசுவாசமாகவும் இருந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கம்பெனிக்காக கடுமையாக உழைத்ததில் நான் பெற்ற பலன், மாத சம்பளமும், மனக்கசப்புமே. என்னை விட பத்து வயது குறைந்தவர்கள் எல்லாம் டெல்லியிலும், மும்பையிலும், பெரிய பதவியில் இருக்கும் போது, நான் மட்டும் ஒரே பதவியில் பதினாறு வருடங்களாக இருக்கிறேன். இதையேதான் நான் டெல்லியிலிருக்கும் கம்பெனி தலைமை அலுவலகத்திலிருந்து நான் வேலை பார்க்கும் கிளைக்கு தணிக்கைக்காக வந்திருந்த என் நெருங்கிய நண்பரான பரந்தாமனிடமும் சொன்னேன்.