ஞானப் பால்

ஐந்தாம் வகுப்பில் கணக்கு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது, அவரை பார்க்க அலுவலக அறையில் யாரோ காத்துக் கொண்டிருப்பதாக பியூன் தாத்தா வகுப்பிற்குள் வந்து சொன்னார்.

"எல்லோரும் முதல் நாலு கணக்குகளையும் சத்தம் போடாமல் பண்ணிக்கிட்டு இருங்க. நான் அஞ்சு நிமிஷத்திலே வந்திடறேன். மல்லிகா, நீதானே லீடர்? யாராவது ஒழுங்கா இல்லன்னா பேரை எழுதி வை. வந்து பேசிக்கிறேன்," என்றவாறு கணக்கு ஆசிரியை வகுப்பை விட்டு வெளியே போனார்.

கணக்கு ஆசிரியை பயங்கரவாதி. அதனால் சிவாவைத் தவிர எல்லா மாணவ, மாணவிகளும் மூச்சு விடும் சத்தம் கூட வெளியே கேட்காதவாறு கணக்கு போட ஆரம்பித்தனர்.

கல்லணை

திவ்யாவாலும், அவள் கணவன் சேகராலும், திருச்சியில் வேணு மாமாவிற்கும், கஸ்தூரி அத்தைக்கும் நடந்த அறுபதாம் கல்யாணத்திற்கு போக முடியவில்லை. தாமதமானாலும் நேரில் போய் வர வேண்டிய அவசியத்தை முன்னிட்டு - மாமாவும், அத்தையும் மிகவும் வசதியானவர்கள் - தம்பதியர் நான்கு நாட்கள் திருச்சிக்கு திக்விஜயம் செய்தனர். மாமா கொஞ்சம் ஆன்மீகப் பைத்தியம். அத்தை உலக நடைமுறை விவகாரங்களில் கெட்டியானவர்.

காதலரும், காவலரும்

வசந்த் இன்னும் சிறிது நேரத்தில் கீதாவை அவள் அலுவலகத்தில் வந்து சந்திப்பதாகத் தொலைபேசியில் கூறி இருந்தான். மூன்று வருடங்களுக்கு பின் அவள் அவனைப் பார்க்கப் போகிறாள்.

தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு, தன் அலுவலக மேஜை அறையில் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த வசந்த்தின் புகைப்படத்தைத் திருட்டுத்தனமாக எடுத்துப் பார்த்தாள். வசந்த் அதில் உயிரோடு நேரிலேயே இருப்பது போல அவளுக்குத் தோன்றியது. அவனது முகத்தை இலேசாக வருடிக் கொடுத்தாள். அவள் மேனியெல்லாம் சிலிர்த்தது.

ஜாதிமல்லி

ஒரு வாரமாகவே தேவிகாவின் முகம் வாடி இருந்தது. 'என்ன விஷயம்' என்று கேட்டு அவளை மலரச் செய்ய வேண்டும் என்று குமரனுக்கு ஆர்வம் இருந்தாலும், கேட்க சிறிது தயக்கமாக இருந்தது.

அவள் பாட்டுக்கு 'புதிய நகை வேண்டும், பட்டு சேலை வேண்டும், உங்கள் அம்மாவோடு பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்,' என்பது போன்ற வில்லங்கமான கோரிக்கைக் கணைகளைத் தொடுத்தால் என்ன செய்வது என்ற பயம்தான் தயக்கத்திற்கான காரணம்.

நான் அவளில்லை

ஜன்னல் வழியே வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ரகுவின் பின்னால் சத்தமின்றி வந்து நின்ற சுபா, "திரும்பிப் பாருங்களேன்," என்றாள்.

தன்னை தன் கணவனுக்காக கவனமாக அலங்கரித்துக் கொண்டு, புன்னகையோடு நின்றிருந்த புத்தம்புது மனைவியைத் திரும்பிப் பார்த்த ரகு உற்சாகமானான். சுபாவின் இடையைத் தன் வலது கையால் வளைத்துத் தன்னருகே இழுத்துக் கொண்ட ரகு, "தேவதையைப் பற்றிக் கதைகளில் படித்திருக்கிறேன். உன்னைப் பற்றித்தான் அந்தக் கதைகளில் எழுதி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்," என்றான்.

4+8=300000

குளிருக்குப் பயந்து சூரியன் வெளி வரத் தயங்கிக் கொண்டிருந்த இருள் பிரியாத அதிகாலை நேரத்தில் அழைப்பு மணி ஒலித்தது. பேப்பர் போடும் பையனை எதிர்பார்த்துக் கதவைத் திறந்த எனக்கு பகீரென்றது.

வாயாவி வள்ளியப்பன் வாயெல்லாம் பல்லாக கொண்டிருந்தார். இவர் என் மனைவியின் ஒன்று விட்ட சித்தப்பா. ஆனால், எல்லோரும் இவரை வாயாவி மாமா என்றுதான் அழைப்பார்கள்.

ஆலங்கட்டி மழை

சுத்தம் என்றால் சிங்கப்பூர் தான் நமக்கு நினைவுக்கு வரும். சிங்கப்பூருக்கு பலமுறை சென்றுவந்திருந்ததால் நானும் சுத்தத்திற்கு உரைகல் சிங்கப்பூர் தான் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அந்த மாயை நியூஸிலாந்தில் காலடி வைத்ததும் உடனடியாக விலகிவிட்டது.

நம்மூர்ப் பெரியவர்கள் "நாமாக ஏற்படுத்திக்கொள்ளும் நல்ல எண்ணத்திற்கும், தானாகவே சுயம்புவாக இருக்கும் நல்ல எண்ணத்திற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு" என்று அடிக்கடி சொல்வார்கள். அதன் சாரம், நியூஸிலாந்தின் மண்ணிலும், மண்ணின் மைந்தர்களிடமும் இயற்கையாகவே ஊறிப்போயிருந்த சுத்தத்தைப்பார்த்ததும் புரிந்தது.

ரிக்சா மாரி

மழை தூறிக்கொண்டிருந்தது. ரிக்ஷா மாரிக்குச் சீக்கிரமாகச் சவாரி கிடைத்தால் தேவலைபோலிருந்தது. இப்போதே மணி சாயந்திரம் ஆறாகிவிட்டது. காலையில் சாப்பிட்ட நீராகாரம் எவ்வளவு நேரம் தாங்கும்?

நமக்கெல்லாம் வறுமை என்றால் என்னவென்று நன்றாகத் தெரியும். எத்தனை சினிமாக்களில் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்! எத்தனை வறுமை ஒழிப்புத் திட்டங்களைப் பற்றிப் பேப்பரில் நுணுக்கமாகப் படித்திருக்கிறோம்!

இறை தருணம்

பேரான்மா சில சமயங்களில் மனிதர்களின் நடுவே நடமாடுவதுண்டு. அப்போது மனித ஜீவனின் மேற்பரப்பு நீரோட்டத்தில் இறைவனின் மூச்சோட்டம் மிதந்து செல்லும். பேரான்மா ஓய்வெடுக்கும் சமயங்களும் உண்டு. அப்போது மனிதர்கள் தங்கள் சொந்த அகந்தையின் வலிமையை, அல்லது வலிமையின்மையை, அனுசரித்து செயல்பட வேண்டிய நிலைக்கு விடப்படுவார்கள். முதலாவது காலக்கட்டங்களில் சிறுமுயற்சிகூட பெரும்பலன்களைத் தந்து, ஊழை மாற்றும். இரண்டாவது காலவெளிகளிலோ, சிறுபலனை உருவாக்க ஏராளமான உழைப்பு தேவைப்படும். பின்னது முன்னதை ஆயத்தப்படுத்துகிறது என்பது மெய்யாக இருக்கக்கூடும்.

பிரபைகளின் அன்னைக்கொரு பாசுரம்

ஒளி
இருண்ட குகையினுள் வருவது போல
என்னுள் ஓர் அகநிறைவு வந்தது,

அது
நிறைக்கிறது.
ஒளிர்விக்கிறது.

அது
வாழ்வின் பற்பல இழைகளை
அதிர்விக்கிறது.

அது
நேற்றைய
மறக்கப்பட்டுவிட்ட சாதனைகளின்
தொடுகையைக் கண்டறிந்து விட்டது.

அது
இன்றைய
மாறிவரும் உருவமைப்புகளின் பீடத்தின் மேல்
நாளைய
புதியவற்றைத் தொடங்க
எனக்கு வல்லமை தருகிறது.

கீழிருந்து மேலெழும்
வாழ்வின் அதிர்வோட்டங்கள்
மேலிருந்து கீழிறங்கும்
விண்ணகத்து ஒளிக்கதிர்களை
எதிர்கொள்கின்றன.