பெண்ணும், சிங்கமும்

முன்னொரு காலத்தில் ஓர் அடிமை ஓர் இளம்பெண்ணை காதலித்தான். அவள் ரோமானிய சக்கரவர்த்தியின் - சீசரின் -  மகள். கொதித்துப் போன சீசர், அடிமையைக் கைது செய்து, அக்கால வழக்கப்படி, ஒரு போட்டி மைதானத்தில் நிறுத்தினான்.

அங்கே இரண்டு மூடப்பட்ட ரகசியக் கதவுகள். ஒரு கதவின் பின்னே பேரழகியான நாட்டியக்காரி ஒருத்தி. மற்றொரு கதவின் பின்னே பசித்த சிங்கம் ஒன்று. 

"நீ சிங்கம் இருக்கும் கதவைத் திறந்தால் அதற்கு இரை ஆவாய். நாட்டியக்காரி இருக்கும் கதவைத் திறந்தால் அவளை மணந்து கொண்டு சுதந்திரமாக வாழ்வாய்," என்று ஆணையிட்டான் மாமன்னன்.

வீரம்

பொன்னொளிப் பித்தரின் மடத்திற்கு ஒரு பக்தர் கோழையான நாயைக் கொண்டு வந்தார். 'உங்கள் அருளால் இதை வீரமுள்ள நாயாக மாற்ற வேண்டும்,' என்று கேட்டுக் கொண்டார். 

'இதென்னடா வம்பாக போச்சு!' என்று திடுக்கிட்ட பொன்னொளிப் பித்தர் தன் சிஷ்யக் கேடிகளைக் கூப்பிட்டார். 

"உங்கள் வாழ்க்கையில் நீங்கள் வீரத்துடன் நடந்து கொண்ட நிகழ்ச்சியைச் சொல்லுங்கள். உண்மையான வீரமுள்ள கதையைக் கேட்டால், இந்த நாயின் கோழைத்தனம் போய்விடும். அதற்கு வீரம் வந்துவிடும்," என்றார். 

சிங்கம், கொள்ளை, புயல், வெள்ளம், போர் போன்றவற்றின் முன் தாங்கள் செய்த வீர சாகசச் செயல்களை ஒவ்வொருவரும் விளக்கமாகக் கூறினர். 

சுவருக்கு அப்பால்

மக்கானந்தரும். ஒரு சிஷ்யக்கேடியும் பாலைவனத்தில் தொலைந்து போய்விட்டனர். 

பல நாட்கள் அலைந்து திரிந்தபின் ஒரு உயரமான சுவரை அடைந்தனர். அதன் மறுபக்கத்திலிருந்து மலர்களின் நறுமணமும், சுவையான பழங்களின் வாசமும் வந்தன. நீரோடையின் சலசலப்பும் கேட்டது. அற்புதமான சோலை சுவருக்கு அப்பால் இருப்பது புரிந்தது.

மக்கானந்தர் குனிந்து கொண்டார். அவர் முதுகின் மீது ஏறிய சிஷ்யக்கேடி சுவருக்கு மறுபக்கம் குதித்துவிட்டான்.

மிகவும் சந்தோஷமாகிவிட்ட மக்கானந்தர் மீண்டும் பாலைவனத்திற்குள் ஓடிச் சென்று காணமல் போனவர்களைக் கண்டுபிடித்து, சோலையைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.

இதுதான்டா சொர்க்கம்

பொன்னொளிப் பித்தரும்,  பிரதான சிஷ்யக்கேடியும் பாலைவனத்தில் தொலைந்து போய்விட்டனர். 

பல நாட்கள் அலைந்து திரிந்தபின் ஒரு உயரமான சுவரை அடைந்தனர். அதன் மறுபக்கத்திலிருந்து மலர்களின் நறுமணமும், சுவையான பழங்களின் வாசமும் வந்தன. நீரோடையின் சலசலப்பும் கேட்டது. அற்புதமான சோலை சுவருக்கு அப்பால் இருப்பது புரிந்தது.

பொன்னொளிப் பித்தர் குனிந்து கொண்டார். அவர் முதுகின் மீது ஏறிய பிரதான சிஷ்யக்கேடி மறுபக்கம் குதித்துவிட்டான்.

மிகவும் சந்தோஷமாகிவிட்ட  பொன்னொளிப் பித்தர், "விட்டதடா தொல்லை, இதுதான்டா சொர்க்கம்!" என்று கூறிக் கொண்டே பாலைவனத்திற்குள் தனியாக நடக்க ஆரம்பித்தார்.

இடைவிடாத சாதனை

ஒரு நாள் பொன்னொளிப் பித்தர் தன் சீடன் ஒருவனிடம் சொன்னார்,  “ஆன்மீகப் பாதையில் முன்னேற இடைவிடாத இறை நினைவு அவசியம் வேண்டும்,” என்றார்.

சீடன் மூன்றாண்டுகள் முயற்சி செய்து இடைவிடாத இறைநினைவைப் பெற்றான். பொன்னொளிப் பித்தரை  சந்தித்து தான் சாதித்தைப் பற்றிச் சொன்னான். “நீ உள்ளே நுழையும் போது உன் செருப்புகளை விட்ட இடத்தில் எத்தனை ஜோடி செருப்புகள் இருந்தன?” என்று கேட்டார்.

பதில் சொல்ல முடியாமல் விழித்தான் சீடன் . “ஆன்மீகப் பாதையில் முன்னேற இடைவிடாத விழிப்புணர்வு தேவை,” என்று அறிவுரை சொன்னார் பொன்னொளிப் பித்தர்.

அறியாமை

ஒரு சீடன் பொன்னொளிப் பித்தருக்குக் கடிதம் எழுதினான்: 'இறை நூலை என்னால் விளங்கிக் கொள்ளவே முடியவே இல்லை. இந்தப் புத்தகத்தை எவரும் புரிந்து கொள்ளவில்லை என்று மதர் சொல்லியிருப்பது மனத்தை வாட்டுகிறது.'

பொன்னொளிப் பித்தர் கடிதமெழுதிய சீடனை  அழைத்து 'இறை நூலை விளக்கினார்.

மௌனகுரு

பொன்னொளிப் பித்தரின் மடத்திற்கு அருகே ஒரு சிறிய குன்று இருந்தது. அங்கே மௌனகுரு என்ற மகான் ஓர் ஆசிரமத்தை நிறுவினார். அங்கு மலரிதழ் உதிரும் ஒலி  கூட கேட்குமளவிற்கு மௌனம் இருக்கும். பல நூறு சீடர்கள் இருந்தாலும் ஒரு சிறு ஒலி கூட அக்குன்றிலிருந்து கேட்காது. அந்த அளவிற்கு மௌனகுரு மௌனத்தைக் கடைப்பிடித்தார்.

மௌனமும், செயலும்

ஒரு சீடன் பொன்னொளிப் பித்தரிடம், "மௌனம் என்றால் என்ன?" என்று கேட்டான், அன்று முழுவதும் மௌனத்தைப் பற்றி பொன்னொளிப் பித்தர் விளக்கினார்.

மறுநாள் அதே சீடன் பொன்னொளிப் பித்தரிடம், "செயல் என்றால் என்ன?" என்று கேட்டான். அன்று முழுவதும் பொன்னொளிப் பித்தர் வாயே திறக்கவில்லை.

அமரப்பாதை

படுத்த படுக்கையாக இருந்த பொன்னொளிப் பித்தரிடம் கமலக்கூத்தர், "உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமா?" என்று கேட்டார்.

"நான் தனியாக வந்தேன். தனியாகப் போகப் போகிறேன். இதில் நீ என்னப்பா உதவி செய்ய முடியும்?" என்று துயரத்துடன் கேட்டார் பொன்னொளிப் பித்தர்.

"வருதலோ, போகுதலோ இல்லாத பாதையை உங்களுக்குக் காட்ட நினைத்தேன்," என்றார் கமலக்கூத்தர்.

பொன்னொளிப் பித்தர் உடனே உடல் நலம் தேறி விட்டார்.

(மறுஆக்கம் செய்யப்பட்ட சென்  கதை)

விழிப்புணர்வு

சிஷ்யக்கேடி ஒருவன் பொன்னொளிப் பித்தரிடம், “ஆன்மீகப் பாதையில் விழிப்புணர்வு அவசியம் என்று சொல்கிறீர்கள். அதை எனக்குக் கற்றுக் கொடுங்கள்," என்று கேட்டுக் கொண்டான்.

அன்று இரவு, ஊரே தூங்கியபின் அவனை ஒரு பணக்காரரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் பொன்னொளிப் பித்தர்.