ஒரு கை ஓசை

பொன்னொளிப் பித்தரிடம் ஒரு சீடன் , “ஏதேனும் பெரிய ஆன்மீக சித்தி பெறுவதற்கான வழி ஒன்றை எனக்குச் சொல்லுங்கள்,” என்று கேட்டுக் கொண்டான்.

“மௌனம் கிடைப்பது பெரிய ஆன்மீக சித்தி. ஸ்ரீ அரவிந்தர் மூன்று நாட்கள் இடைவிடாமல் முயற்சி செய்து மௌனத்தை அடைந்தார். நீ மூன்று மாதங்கள் ஒரு கை ஓசையை கேட்க முயற்சி செய். அதன்பின் உனக்கு மௌனம் சித்திக்கும்,” என்றார்.

சத்தமே இல்லாத வசதியான அறையில் தனிமையில் தங்கி மூன்று மாதங்கள் முயற்சி செய்த சீடன் , “என்னால் ஒரு கை ஓசையைக் கேட்க முடியவில்லை,” என்று பொன்னொளிப் பித்தரிடம் சொன்னான். 

அகச்சுமை

பொன்னொளிப் பித்தரிடம் ஒரு சீடன் கேட்டான், "என் அகத்தில் எதுவுமே இல்லை. என்ன செய்வது?"

"எல்லாவற்றையும் வெளியே கொட்டி விடு," என்றார் பொன்னொளிப் பித்தர்.

"என்ன இது! நான்தான் என்னுள் ஒன்றுமே இல்லை என்கிறேனே?" என்றான் சீடன் .

"அப்படியானால், எல்லாவற்றையும் சுமந்து கொண்டேயிரு!" என்றார் பொன்னொளிப் பித்தர்.

(மறுஆக்கம் செய்யப்பட்ட சென் கதை)

ஆன்மீக ஆர்வம்

பொன்னொளிப் பித்தரிடம் ஒரு சீடன் “எனக்கு ஏன் எதுவும் சொல்லித் தர மறுக்கிறீர்கள்? என்று கேட்டான். 

“உனக்கு ஆர்வமில்லை,” என்றார் பொன்னொளிப் பித்தர். 

“என் ஆன்மீக ஆர்வத்தை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை,” என்றான் சீடன். 

சீடனை  ஒரு குளக்கரைக்கு அழைத்துச் சென்ற பொன்னொளிப் பித்தர் அவனை குளத்தில் இறங்கச்  சொன்னார். அவன் குளத்தில் இறங்கியதும், எதிர்பாராத நேரத்தில்,  அவன் தலையை தண்ணீரில் மூழ்கச் செய்து இறுகப் பிடித்துக் கொண்டார்.

சிறிது நேரம் அவன் மூச்சுக்காற்றுக்காக தவித்து துடிதுடித்துப் போனான். அதன்பின் அவனை விடுவித்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்டவன்

ஒரு நாள் இரவு பொன்னொளிப் பித்தர் லைப் டிவைன் வாசித்துக் கொண்டிருந்தபோது அவர் கழுத்தில் கத்தியை வைத்த திருடன் ஒருவன் "பணத்தை எல்லாம் கொடு," என்றான்.

"பணத்தைக் கேட்கும்போது கத்தியை எல்லாம் ஏனப்பா கழுத்தில் வைக்கிறாய்? எல்லா பணமும் அலமாரியில்தான் இருக்கிறது. எடுத்துக் கொள்," என்றார் பொன்னொளிப் பித்தர்.

திருடன் எல்லா பணத்தையும் எடுக்கும் போது "தம்பி, நாளைக்கு வரி கட்ட வேண்டும். நூறு ரூபாய் வைத்து விட்டுப் போ,"என்றார். 

அகந்தை

ஒரு நாள் பொன்னொளிப் பித்தருக்கு மிகவும் அசதியாக இருந்தது. என்ன, ஏது என்று புரியாததால் கமலக்கூத்தரை அழைத்து, "நீதான் இனி மடாதிபதி. எல்லா பொறுப்புகளும் இனி உன்னுடையவை," என்று சொல்லிவிட்டு முழு ஓய்வெடுக்க ஆரம்பித்தார்.

ஒரு மாதம் கழித்து  பொன்னொளிப் பித்தர் கமலக்கூத்தரிடம் "என்னப்பா செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். 

"நம் கழிப்பறைகள் மிகவும் பழைய பாணியில் இருக்கின்றன எல்லாவற்றையும் நவீன மோஸ்தர் கழிப்பறைகளாக மாற்றும் முக்கியமான திட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்," என்றார் கமலக்கூத்தர். 

"வேலை எப்போது முடியும்?" என்று கேட்டார் பொன்னொளிப் பித்தர். 

ரொம்ப சரி

பொன்னொளிப் பித்தர் ஒரு சிறு வீட்டில் ஆனந்தக் கூத்தரோடும், இன்னும் நான்கைந்து சீடர்ககளுடனும்  ஆன்மீகப் பணிகளை செய்து வந்தார்.

ஒரு நாள் அந்த ஊரிலிருந்த அழகிய இளம் பெண்ணொருத்தி திருமணத்திற்கு முன்பே தாய்மை அடைந்து விட்டாள். அவளது பெற்றோர் அவளை அதட்டி, மிரட்டி கேட்ட போது பொன்னொளிப் பித்தர்தான் காரணம் என்று கூறி விட்டாள்.

ஊர் பஞ்சாயத்து கூடியது. ஊர்த் தலைவர், "நீயெல்லாம் ஒரு யோகியா? பித்தலாட்டப் பெண்பித்தன். உன்  மடத்திலிருந்து உன்னை விலக்குகிறோம்," என்று தீர்ப்பு கூறினார்.

அழகிய கதைகள் சொல்வோம்

(கதைகளைப் பற்றி மதரின் கருத்து.)

உலகில் அவலட்சணமான விஷயங்கள் ஏராளமாக இருக்கின்றன என்பது அவற்றைப் பற்றி நாம் புத்தகத்தில் சொல்லோவியமாகத் தீட்டாமலேயே நமக்குத் தெரியாதா?

ஏற்கனவே வாழ்வு அலங்கோலமான, தாழ்ந்த, துயரமான, சில சமயங்களில் அருவருப்புத் தரக் கூடிய விஷயங்களால் நிறைந்திருக்கும்போது, அவற்றை விடவும் மோசமானவற்றைக் கற்பனை செய்வதால் என்ன பயன் விளையப் போகிறது?  நான் சிறு குழந்தையாக இருந்த போதிருந்தே இந்த விஷயம் எனக்கு ஆச்சரியத்தைத்தான் தந்திருக்கிறது.

ஓர் அழகிய விஷயத்தைப் பற்றியோ, ஓர் அழகான வாழ்க்கையைப் பற்றியோ கற்பனை செய்தால், பட்ட சிரமத்திற்குப் பலன் உண்டு.

நீலப் பறவை

நான்
அவனது நீல நிறத்தாலான தேவபறவை.
தெய்வீகத் தெளிவும், உயர்வுமுள்ள
இனிய, சத்திய கானங்களை
இறைவனின் செவிகளிலும்,
தேவபாணன் செவிகளிலும்
பாடுகிறேன்.

மாளும் மண்ணிலிருந்து
துயரற்ற விண்ணிற்குள்
அக்னி போலெழுகிறேன்.
மனிதன் பிறந்து துயருறும் மண்ணில்
பரவச அக்னிவிதைகளை
தூவுகிறேன்.

கால, வெளிகளைக் கடந்து
மங்காத ஒளிவெளிக்குள்
என் சிறகுகள் மேலெழுகின்றன.
நான்
நித்தியத்தின் வதனத்தின் ஆனந்தத்தையும்,
பேரான்மாவின் பார்வையின் பெரும்பேறையும்
கொணர்கிறேன்.

சரியும், தவறும்

பொன்னொளிப் பித்தரின் மடத்தில் ஒரு சீடன் திருடி விட்டான். மற்ற சீடர்கள் அவனைப் பிடித்து பித்தரிடம் இழுத்து வந்தனர். "சரி, நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார் பொன்னொளிப் பித்தர்.  ஆனால் திருடியவனை ஒன்றும் செய்யவில்லை.

சில நாட்கள் கழித்து அதே சீடன் மீண்டும் திருடினான். மற்ற சீடர்கள் அவனைப் பிடித்து பித்தரிடம் மீண்டும் இழுத்து வந்தனர். "சரி, நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார் பொன்னொளிப் பித்தர்.  ஆனால் திருடியவனை ஒன்றும் செய்யவில்லை.

சொர்க்கமும், நரகமும்

ஒரு முரடன் பொன்னொளிப் பித்தரைக்  கேட்டான், "சொர்க்கத்தையும், நரகத்தையும் படைப்பது யார்?"

"போடா மூடா," என்றார் பொன்னொளிப் பித்தர்.

எரிச்சலும், கோபமும் அடைந்த முரடன் பொன்னொளிப் பித்தரை  அறைவதற்குக் கையை ஓங்கினான். "ஆஹா, நரகத்தைப் படைக்கிறாய்!" என்று கூவினார் பொன்னொளிப் பித்தர்.

முரடனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. கையை கீழே இறக்கினான்.

"ஆஹா, சொர்க்கத்தைப் படைக்கிறாய்!" என்று கூவினார் பொன்னொளிப் பித்தர்.

(மறுஆக்கம் செய்யப்பட்ட சென் கதை)