விழிப்புணர்வு

சிஷ்யக்கேடி ஒருவன் பொன்னொளிப் பித்தரிடம், “ஆன்மீகப் பாதையில் விழிப்புணர்வு அவசியம் என்று சொல்கிறீர்கள். அதை எனக்குக் கற்றுக் கொடுங்கள்," என்று கேட்டுக் கொண்டான்.

அன்று இரவு, ஊரே தூங்கியபின் அவனை ஒரு பணக்காரரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார் பொன்னொளிப் பித்தர். 

சத்தம் போடாமல் கள்ளச் சாவி போட்டு கதவைத் திறந்து வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பணமும் நகையும் வைக்கும் அறைக்குள் நுழைந்ததும் சிஷ்யக்கேடியை உள்ளே விட்டு கதவைப் பூட்டினார். பின் வெளிவாசலுக்கு வந்து தடதடவென்று கதவைத் தட்டினார். எல்லோரும் எழுந்து கொண்டதும் சத்தம் போடாமல் தன் மடத்திற்கு திரும்பி விட்டார் பொன்னொளிப் பித்தர். 

பல மணி நேரம் கழித்து மடத்திற்கு சிஷ்யக்கேடி வந்து சேர்ந்தான். 

“என்ன ஐயா இப்படி செய்து விட்டிர்கள்! நான் மாட்டியிருந்தால் என்னைத் திருடனென்று நினைத்து உண்டு, இல்லை என்று பண்ணியிருப்பார்கள். எவ்வளவு கவனமாக தப்பி வந்தேன் தெரியுமா!” என்றான் சிஷ்யக்கேடி.  

“அதுதான்டா விழிப்புணர்வு,” என்று சொல்லி சிரிசிரியென்று சிரித்தார் பொன்னொளிப்  பித்தர். 

(மறுஆக்கம் செய்யப்பட்ட பழைய கதை)

Tamil Author Term
Tamil Content Terms