மௌனகுரு

பொன்னொளிப் பித்தரின் மடத்திற்கு அருகே ஒரு சிறிய குன்று இருந்தது. அங்கே மௌனகுரு என்ற மகான் ஓர் ஆசிரமத்தை நிறுவினார். அங்கு மலரிதழ் உதிரும் ஒலி  கூட கேட்குமளவிற்கு மௌனம் இருக்கும். பல நூறு சீடர்கள் இருந்தாலும் ஒரு சிறு ஒலி கூட அக்குன்றிலிருந்து கேட்காது. அந்த அளவிற்கு மௌனகுரு மௌனத்தைக் கடைப்பிடித்தார்.

ஒரு நாள் அதிகாலையில் பொன்னொளிப் பித்தர் இறை நூலை வாசித்துக் கொண்டிருக்கும் போது, அக்குன்றிலிருந்து வேத மந்திர ஒலிகள் எழுந்தன. அந்தப் பிரதேசமே ஆன்மீகப் பேரொலியால் அதிர்ந்தது. "மௌன குரு சமாதியடைந்து விட்டார். போலிருக்கிறது," என்று கூறிவிட்டு இறை நூலை தொடர்ந்து வாசிக்கலானார் பொன்னொளிப் பித்தர்.

(மறுஆக்கம் செய்யப்பட்ட சென் கதை) 

Tamil Author Term
Tamil Content Terms