பிரபைகளின் அன்னைக்கொரு பாசுரம்

ஒளி
இருண்ட குகையினுள் வருவது போல
என்னுள் ஓர் அகநிறைவு வந்தது,

அது
நிறைக்கிறது.
ஒளிர்விக்கிறது.

அது
வாழ்வின் பற்பல இழைகளை
அதிர்விக்கிறது.

அது
நேற்றைய
மறக்கப்பட்டுவிட்ட சாதனைகளின்
தொடுகையைக் கண்டறிந்து விட்டது.

அது
இன்றைய
மாறிவரும் உருவமைப்புகளின் பீடத்தின் மேல்
நாளைய
புதியவற்றைத் தொடங்க
எனக்கு வல்லமை தருகிறது.

கீழிருந்து மேலெழும்
வாழ்வின் அதிர்வோட்டங்கள்
மேலிருந்து கீழிறங்கும்
விண்ணகத்து ஒளிக்கதிர்களை
எதிர்கொள்கின்றன.

பொய்மையும், இருளும்,
மெய்மையாகவும், ஒளியாகவும்
நிலைமாறுகின்றன.
கோரமும், தவறும்,
அழகாகவும், சரியாகவும்
நிலைமாறுகின்றன.

பிரபைகளின் அன்னையே,
என் மனதின்
குறுகலான எல்லைகளுக்குள்
நீ உதயமாகிவிட்டாய்.

என் மனதின்
ஆழமற்ற விறைப்புகளிலிருந்து,
சுவர்களாலான வெளிகளின் மத்தியில்
அழியாவாழ்வு வாழும்
இதயம் போன்ற ஏதோவொன்றை
உருவாக்கிவிட்டாய்.

மனதின்
பொருளற்ற துருவப் பகுதிகளுக்கிடையே,
உயிருள்ள, கதகதப்பான அறையொன்றை
எனக்குக் காட்டிவிட்டாய்.

அங்கு என்னால்
பத்திரமாக ஓய்வெடுக்க முடியும்.
அங்கு என்னால்
உன்னிடம் அடைக்கலம் புகமுடியும்.

இயக்கும் விசைகளின்
தாழ்ந்த வலைப்பின்னல்
இன்னமும் எஞ்சி நிற்கிறது.
ஆனால்,
அதன் நடுவே
உன்னிருப்பை உணர்கிறேன்.

இயக்கும் விசைகளின்
உயர்ந்த வலைப்பின்னல்
இன்னமும் எஞ்சி நிற்கிறது.
அங்கு நீ
அடியெடுத்து வைத்துவிட்டாய்.
முன்னம் அங்கிருந்திராத
வாழ்வின் கதகதப்பைத் தருகிறாய்.

சாம்பல் போர்த்திய
மங்கலான ஒளியை,
ஆன்மாவின் தவிப்பணைக்கும்
ஜீவநீரின் ஜ்வலிப்பாக
நீ மாற்றினாய்.

ஊக்க உயிர்துடிப்புமிக்க
உன்னிருப்பு
எங்கெங்கும் உண்டு.
உன் சர்வவியாபகத்தைக்
கோரிய என் ஆர்வாக்னி சொற்களை
நீ செவிமடுத்துவிட்டாய்.

அறியாமையோடு
நான் நாடியதைவிட
நீ அதிகமாகப் புலப்படுத்திவிட்டாய்.

நான்
சத்தியத்தின் சட்டத்தைச் சார்ந்திருந்தால்
நீ என்னோடு நெருக்கமாகி, ஒன்றாகிறாய்.
நான்
பொய்மையின் பிழைகளைப் பற்றியிருந்தால்
நீ வெகுதூரம் விலகி, தள்ளி இருக்கிறாய்.

என்னை இருட்டடிக்கும் கருநிழல்
எதுவுமே என்னிடமில்லாதபோது,
பாவனைகள் எதுவுமற்ற என் ஜீவனின்
ஒவ்வொரு பகுதியையும்
நீ பார்க்கும்போது,

உனக்கான அழிவற்ற இல்லத்தை,
உனக்கான அழிவற்ற ஆலயத்தை
என்னுடலின் ஒவ்வொரு உயிரணுவிலும்
நீ பார்க்கும்போது,

நீயென்னை நீயாக உணர்ந்தபோதும்
நான் உன்னை வணங்குவதை
நீ பார்க்கும்போது,

இறுகிவிட்ட ஞானத்தங்கத்தை
பக்தி ஜீவநீரோட்டத்தில்
நீ உருக்கும்போது,

என்னுலகை உடைத்து
அதன் சக்திகளை
நீ விடுவிக்கும்போது,

என் கர்வத்தை
உன் கைகளின் ஆற்றலாக
நீ மாற்றும்போது,

என் அறியாமையை
ஒளியாக
நீ மாற்றும்போது,

என் இடுக்குகளை
அகலிடங்களாக
நீ மாற்றும்போது,

என் சுயநலத்தை
ஒரு மையத்தில் மெய்யாகக் குவியும்
ஆற்றல்களாக
நீ மாற்றும்போது,

என் பேராசையை
சத்தியத்தின் பொருளை அடைய
சத்தியத்தை சலிப்பின்றி தேடும்
கொள்திறமாக
நீ மாற்றும்போது,

என் அகந்தையை
தன்னுணர்வுமிக்க மெய்யான கருவியின்
மையமாக
நீ மாற்றும்போது,

என் மனத்தை
நீ இறங்கிவரும்
வழியாக
நீ மாற்றும்போது,

என் இதயத்தை
தூய அக்னியும், ஜோதியும் கொண்ட
உன் இதயமாக
நீ மாற்றும்போது,

என் வாழ்வை
நீ கையாளும்
தூய, ஒளிபுகும் பொருளாக
நீ மாற்றும்போது,

என் உடலை
நீ எதை வைக்க விரும்புகிறாயோ
அதைக் கொள்ளும்
பிரக்ஞையுள்ள பாத்திரமாக
நீ மாற்றும்போது

பிரபைகளின் அன்னையே,
வாழ்வில்
என் இப்போதைய இலக்கும்
இனிவரும் நாட்களின் இலக்கும்
மெய்யாக, சரியாக, விரிவாக
பூர்த்தியாகும்.

ஆர்வம்
என்னுள் விழித்தெழுகிறது..
என் ஆர்வத்தழல்களையெல்லாம்
என்னுள் பூர்த்தி செய்துவிடு

* * * *

நான் செவிமடுக்கும்
உன் சொற்களெல்லாம்
உடனுக்குடன்
அந்தரங்க ஞானமாக
சுயபுலப்படுதலாக
ஒன்றானதன் வெளிப்பாடாக
உள்ளும், புறமும். உடனே அறியக்கூடியதாக
மாற்றிவிடும்
பிரக்ஞை நிலையை
என்னுள் உருவாக்கு

அன்னையே
நான் உன்னிடமிருந்து பெறுவது
எதுவாக இருந்தாலும்
அது எங்குமிருக்கும்
அகஆழத்தின் அகலிடங்களாக
இருக்கட்டும்.

உன்னோடு ஒன்றாகி
உன்னத உவகையை
எல்லா வழிகளிலும் அடைவேனாக.

ஆயினும்
உன்னிலிருந்து தனித்து நின்று,
உன்னை நோக்கி நகரும்
பக்தியோடையென
நானாக வேண்டும்.

வாழ்வும் அதன் இயக்கங்களும் போல,
வெப்பமும் ஒளியும் போல,
ஆற்றலும்,அதன் வெளிப்பாடுகளும் போல,
மெய்ஞ்ஞானமும் அதன் பலன்தரும் சக்தியும் போல,
உன்னோடு ஒன்றாகவும்
உன்னிலிருந்து தனித்தும்
இருப்பேனாக.

நீ எனக்குத் தருவது
புதையலாக இருக்க வேண்டாம்.
அது நானே
சுயமாகக் கண்டறிந்ததாக இருக்கட்டும்.

என் பிரக்ஞையில் உள்ள
பிரிவை துடைத்துவிடு.

உன்னில் ஒரு பகுதியாக நின்று
உன்னை நான் காண வேண்டும்.
உன்னில் ஒரு பகுதியாக நின்று
உன்னை நான் செவிமடுக்க வேண்டும்.

ஒன்றாகி அறிதலால்
வரும் ஞானத்திற்காக,

ஒன்றாகி அறிதலால்
பிறக்கும் தரிசனத்திற்காக,

ஒன்றாகி அறிதலால்
வரும் கேள்விப்புலனின் தன்மைக்காக,

என் ஜீவசக்திகள் ஆர்வமுறுகின்றன.

உன்னோடு ஒன்றாகி அறிதல்.
நீயே ஒன்றாகி அறிதல்.

உன்
அளவற்ற, மின்னும் வெளிகளில்
நீ வெளிப்படுத்தும் பகுதியாக
நான் ஆவேனாக.

* * * *

என் ஆர்வாக்னியை
வளர்ப்பாயாக!

உடனடியாக
அனைத்துவழிகளிலும்
என் சரணாகதியை
சாத்தியமாக்குவாயாக

என் திறப்பையும், ஏற்புத்திறத்தையும்
விரிவாக்குவாயாக.

அகஆழத்து சைத்திய செயல்பாடுகளை
தாமதப்படுத்தும் மூடிகளை
நீக்கிவிடுவாயாக.

அன்னையே,
என்னிடம் உள்ளவற்றையும்,
என்னிடம் இல்லாதவற்றையும்,
என்னிடமிருந்து
எடுத்துக் கொள்வாயாக.

என் உடலின் உயிரணுக்கள்,
என் நரம்புமணடலத்தின் இழைநார்கள்,
என் மனதின் ஐந்து ஓடைகள்,
அனைத்தும் உன்னிடம்
நிபந்தனையின்றி சரணடைகின்றன.

பிரபைகளின் அன்னையே,
இருத்தலில் பொய்மை வேண்டாம்,
பிரக்ஞையில் பிளவு வேண்டாம்,
ஜீவநீரில் மரணம் வேண்டாம்,
நரம்புச்சுருளில் பிணக்கும், துயரமும் வேண்டாம்,
உடலில் நோய் வேண்டாம்.

உன் குரல் எனக்கு மறுமொழி தருகிறது:
ஜடத்தில்
சரணாகதியின் ஐந்துவகை ஆற்றல்களால்,
உன் பின்னிருக்கும் சைத்திய உந்துதலின்
அமைதியான தீவிரத்தால்,

முக்கியமாக,
உன் பிரக்ஞையில்
மறைந்திருக்கும் வளங்களை,
உள்ளுறை ஆனந்தத்தை
மேலும் மேலும் வளர்ப்பாயாக.

அனைத்திற்கும் முதலாக,
நான் உன்னுள் கொண்ட
விருப்புறுதியை
அறிவாயாக

அடுத்ததாக,
நீ எதில் தன்னுணர்வு பெற்றாயோ
அதுவாக இருப்பாயாக

உன் அத்தனையும்
என்னுள் இருக்கின்றன என்பதை
இப்போதும், முப்போதும்
அறிவாயாக!

* * * *

Hymn to the Mother of Radiances
By Amirta, revised by Sri Aurobindo.

An inner fullness has come in like the coming in of light in dark caves. It fills, it illumines, it vibrates the multiple strings of life; it has found the contact with the forgotten achievements of the past to enable me to start the new ones of the future on the basis of the changing formations of the present. The currents of life well up to meet the descending rays light from the upper heavens for transmutation of the base end the dark into the luminous and the true, for transmutation of the ugly and the wrong into the beautiful and the right.

O Mother of Radiances, you have dawned in the narrow horizons of my mind. Out of its depthless rigidities, in the midst its walled-up spaces you have created a heart-like something that will live its eternal life. You have revealed to me a chamber alive and warm within the mind's substanceless polar regions and there I can safely retire and find in you my refuge.

The lower network of moving forces remains, but I feel your presence in its midst. The higher network of moving forces remains, and here you have stepped in also shedding a warmth of live that was not there before, you have turned the dull grey luminosity into a brilliance of living waters. Your active and living presence is everywhere; you have heeded my words of aspiration, the fire of my demand for your omnipresence. More than I ignorantly sought for, you have revealed to me. You are intimate and one with me when in truth and law and yet away and far off from me when in error and in falsehood.

When there are no more darkening shadows about me; when you see me bared of all shams and shows in every part of the being; when you see in every cell of my body an eternal home for you and an eternal temple; when you see me one with you in identity and still worshipping you; when you melt the compact gold of knowledge in the living and running waters of devotion; when you break my earth and release the energies; when you turn my pride into power in your hands and my ignorance into light, my narrowness into wideness, my selfishness into a true gathering together of forces in one centre, my greed into a capacity of untiring search after the truth for the attainment of its substances, my egoism into the true and conscious instrumental centre, my mind into a channel for you to descend, my heart into your hearth of pure fire and flame, my life into a pure and translucent substance for your handling, my body into a conscious vessel for holding what of you is meant for me; then, 0 Mother of Radiances, my aim in life now and hereafter will be fulfilled in the true and right and vast way. Aspiration wakes in me! Achieve in me all that I flame for!

* * * *

Create in me a state of consciousness in which whatever I hear from you may at once turn into an intimate knowledge, a self-revelation, an expression of identity, an awareness at once of the within and the without. O Mother, whatever I gather from you, let it be of the deep vasts of the within which is omnipresent. May I be one with you in every way to have the supreme Delight, yet separate from you to stream forth devotion to you, one and yet separate like life and its movements, like heat and light, like power and its expression, like true knowledge and its effecting force. Let what you give me be not a treasure to me but as if a thing of my own self-discovered.

Wipe out the division in my consciousness that I may see and listen to you as part of yourself. The life-energies in me- aspire for the knowledge that comes from identity, for the vision that is born of identity, for the listening that takes its orientation in identity,-the identity that is yourself.

May I be the manifestation of a portion of you in your limitless and shining spaces.

* * * *

Increase my fires and aspiration, make the surrender in me possible at once and in every way; widen my openness and receptivity; remove the coverings that delay the workings of psyche deep within; take away, O Mother, from me what I have and what I have not

The cells of my body, the filaments of my nervous coat, the five streams of my mind,-all make their unconditioned surrender to you, O Mother of Radiances, that there may not be falsehood in existence, division in consciousness, death in the living waters, want of harmony and misery in the nervecoils, disease in the body. Thy voice replies to me:

"By the fivefold powers of surrender in the physical, by the quiet intensity of the psychic urge that is behind you, centrally, increase ever and ever the inherent Ananda and the hidden opulences of your consciousness. First of all, become conscious of what I have willed in you; be, next, that of which you have become conscious. Know at once and for ever, 'In me is your all.' "

* * * * 
 

Tamil Author Term
Tamil Content Terms