சிறுகதைகள்

கள்வனின் காவல்

ஒளி இருண்டிருந்த அறையை திடாரென நிரப்பியதும் திடுக்கிட்டு நிமிர்ந்தேன். மாலை முழுவதும் வாசித்த புத்தகத்தைப் பற்றி யோசித்துக் கொண்டே உட்கார்ந்து கொண்டிருந்ததில் விளக்கேற்ற மறந்து, விட்டிருந்தேன்.

விளக்கேற்றிய கமலா புன்னகைத்தாள்.

சிறு தலையணை போலிருந்த புத்தகத்தை அவளிடம் காட்டினேன். ‘காவல் கோட்டம். மாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்ததிலிருந்து சுதந்திரப் போராட்ட காலக்கட்டம் வரையிலான மதுரையின் வரலாறு. இதை எழுதியவர் பத்து வருடங்கள் எங்கெங்கோ அலைந்து, தகவல்களை திரட்டி, எழுதியிருக்கிறார். அந்த அர்ப்பணிப்பிற்கு, உழைப்பிற்கு இவருக்கு சாகித்ய அகாதமி பரிசு தந்தது சரிதான்,’ என்றேன்.

மாங்கனி

(கவி காசிதாஸ் வங்காள மொழியில் எழுதிய மகாபாரதத்தில் சத்தியத்திற்கு கட்டுப்படும் ஜடமான மாங்கனியின் கதை உள்ளது. ஆண்டுக்கொரு முறை தோன்றும் நாவல்கனி, பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் மாங்கனி என இதன் சற்றே மாறுபட்ட வடிவங்கள் ஒரிய மொழியிலுள்ள சரள மகாபாரதத்திலும், தமிழ்மொழியிலுள்ள வில்லி பாரதத்திலும் உள்ளன. பல்வேறு மொழிகளிலும் சிறு பாடபேதங்களோடு இக்கதை வாழ்ந்து வந்தாலும், மூலம் எது என எங்கும் குறிப்பிடப்படவில்லை. வியாச மகாபாரதத்தில் இக்கதை இப்போது இல்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்ததா என்று தெரியவில்லை.

கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்

கமலாவிற்கு மிகவும் நீளமான, அடர்த்தியான கூந்தல். ‘மலையாளத்து மங்கையோ?’ என்று கூந்தலை பார்த்துவிட்டு கேட்பவர்கள் உண்டு. அளகபாரம் தொடை வரை தொங்கும். விரித்து விட்டால் உடை அணிந்திருக்கிறாளா இல்லையா என்பதே தெரியாது. கறுப்பு நிற மேலங்கி போட்டிருப்பது போலிருக்கும். ஆனால் அவள் ஒருபோதும் கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு இருக்கமாட்டாள். குடும்பத்திற்கு ஆகாதாம்.

'இதென்ன மூட நம்பிக்கை?' என்று கேட்டேன்.

தீபாவளி

எனக்கு எண்பது வயதிற்கு மேலாகிறது. எத்தனையோ அனுபவங்கள் மனக்கிடங்கின் இருளான மறதி பகுதிகளில் சிதறிக் கிடக்கின்றன. ஒரு சில அனுபவங்கள் மட்டுமே சுயமாக ஒளி வீசிக் கொண்டு மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்து சிலிர்க்க வைக்கின்றன. கூடவே பண்புகளாலான மனிதன் பிரபஞ்சத்தைப் போல மகத்தானவன் என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.

என்கொல் திருஉளம்

கணந்தோறும் நான் மீண்டும், மீண்டும் பிறந்து, மேலும், மேலும் வளர்கிறேன் – நான் தொடர்பு கொள்ளும் அனைத்தின் மூலமும்.

வளர்வது தொடர்ந்தால் வாழ்விற்கு முடிவில்லை என்பதால் நேற்றைய நினைவுகளின் வழியாகவும். இன்றைய நிகழ்வுகளின் வழியாகவும், நாளைய கனவுகளின் வழியாகவும் ஒவ்வொரு கணமும் வளர்ந்து கொண்டே இருக்கிறேன்.

மூன்று வயதிலிருந்து இன்றுவரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே என் நினைவில் இருக்கின்றன. சில தெளிவாக. பல மங்கலாக. கவனம் ஒருமுனைப்பட்டால் எந்த நிகழ்ச்சியையும் என்னால் மனத்திரையில் நகரும் ஒலியொளிப் படமாக தெளிவாகக் காண முடிகிறது. அதில் மற்றுமொரு முறை உணர்ச்சிகளோடு வாழவும் முடிகிறது.

சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

சென்னையில் பெரும்செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியில், இருபக்கங்களிலும் மரங்கள் உள்ள அமைதியான சாலையில், மிகவும் அகலமான கறுப்பு கம்பிக் கதவுகளும், உயரமான வெண்ணிற சுற்றுச் சுவரும் கொண்ட பெரிய மாளிகை பெரும்பாலானோருக்கு ஏதோ ஒரு பணக்கார வீடு. ஆனால் என்னைப் போல பெண்மையை ஆராதிக்கும் கலாரசிகர்களுக்கு அது அழகு தெய்வத்தின் திருக்கோவில். அது நடிகை மோகனாவின் வீடு.

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ?

நான் இப்படி திகைச்சு நின்னுண்டிருக்கச்சே எதுத்த ஆத்துக்கு பாடம் படிக்க வர்ற புள்ளையாண்டான் கேட்டான், 'என்ன மாமி, முகம் வாடியிருக்கு?'

அவன் ஆடிட்டர் படிப்பு படிச்சிருக்கான். எதுத்தாத்து சாஸ்திரிகள்கிட்டே ஜோசியம் படிக்க வருவான். கையிலே ஒரு கம்ப்யூட்டர் வச்சுண்டு பித்து பிடிச்ச மாதிரி அதையே சதா வெறிச்சு பாத்துண்டு இருப்பான். கதை எழுதறேம்பான். அம்பாள் உபாசகன்னு சொல்லுவான். அப்புறம் யோகம் படிக்கிறேம்பான். இன்னும் என்னேன்னவோ சொல்லுவான். தான் என்ன செஞ்சிட்டிருக்கேன்னு அவனுக்கும் தெரியாது. மத்தவாளுக்கும் தெரியாது.

மகுடம்

இன்றைய பேரொளியின் அடர்ந்த அதிதீவிர வெளிப்பாடே இருண்டிருந்த நேற்றைய இரவு என்றுணர வைத்த உஷத்தேவியை எண்ணி நன்றியால் நெகிழ்ந்து பனியாக உருகிக் கொண்டிருந்த இமயமலைக்கு பொன்மகுடம் அணிவித்துக் கொண்டிருந்தான் சூரியன். நன்றியை பொற்கவசமாகவும், அறத்தை மணிகுண்டலங்களாகவும் அணிந்து, அழிந்தொழியும் அற்பர்களிடையே அமரனாக வல்லவனை பொற்கரங்களால் அணைக்க, மின்னும் அணிகலன்கள் பூண்டு, ஏழுவகைப் புரவிகளை ஞானத்தேரில் பூட்டி வான வீதியில் நகரத் தொடங்கியிருந்தான்.

அஸ்திவாரம்

வெளியே போவதற்காக கதவைத் திறந்தபோது வாசலில் ஆனந்தி நின்று கொண்டிருந்தாள். “கதவை தட்டப் போனேன், என்னை வரவேற்க கதவை திறந்து விட்டீர்கள்!” என்றாள் ஆனந்தி.

“அப்படி வேறு நினைத்து விட்டாயா? நான் புத்தகக் கண்காட்சிக்குப் போகலாம் என்று நினைத்துக் கிளம்பினேன்,” என்றேன்.

யாருக்காக

மாலை ஆறு மணிக்கு நான் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பியபோது இருட்டி விட்டது. 

இறைவன் வாழ்வில் வரும் தருணத்தில் மனிதன் மீது பொழியப்படும் அடையருளை அவன் அலட்சியப்படுத்தும்போது, அது மெல்லக் குறைந்து மறைந்து விடுவதைப் போல, அதிகாலை முதல் பெய்து கொண்டிருந்த அடைமழை மெல்லக் குறைந்து, தூறலாகி, மாலையில் நின்று விட்டிருந்தது.